Thursday, July 10, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் கப்பல்களின் வருகை மேலும் தாமதம்

எரிபொருள் கப்பல்களின் வருகை மேலும் தாமதம்

பெற்றோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் கப்பல்களின் வருகை மேலும் தாமதமடையுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

குறிப்பிட்ட திகதியில் எரிபொருள் விநியோகிப்பதில் உள்ள சிரமம் தொடர்பில் விநியோகஸ்தர்களால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்து தரையிறக்கப்படும் வரை, எரிபொருள் விநியோகத்தின் போது பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த வாரத்திற்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் டீசலும் பெற்றோலும் விநியோகிக்கப்படும்.

எனவே, எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles