Wednesday, October 22, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஊடகத்துறை முடங்கும் அபாயம்

ஊடகத்துறை முடங்கும் அபாயம்

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த, ஏனைய பணிகளுக்காக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது கைவிடப்பட்டுள்ளது.

இதன்படி, போக்குவரத்து, சுகாதாரம், விமான சேவைகள், ரயில், துறைமுகம், முப்படையினர் ஆகிய அடையாளம் காணப்பட்ட தரப்பே, அத்தியாவசிய சேவைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

வைத்தியசாலைகளுக்கு தேவையான எரிபொருள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டு மக்களுக்கு தகவலறியும் உரிமையை உறுதி செய்து வரும் ஊடகத்துறை, இந்த அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடக்கப்படவில்லை.

எனினும், ஊடக நிறுவனங்களில் மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு மாத்திரம் தேவையான டீசலை விநியோகிப்பது குறித்து, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் ஆகிய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக வெகுச ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பெற்றோலை விநியோகிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles