எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதற்கமைய சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம், துறைமுகங்கள், விவசாயத்துறை மற்றும் ஏற்றுமதி தொழிற்றுறை உள்ளிட்டவற்றுக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதியில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் குறுகிய தூர போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைப்படக் கூடிய நிலை ஏற்படும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.