தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் வட பகுதியை, அபிவிருத்தி செய்வதாககூறி, இந்திய அரசிற்கு விற்பனை செய்யவுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர் மொகமட் ஆலம் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையம், அதானி குழுமம் எடுத்துள்ள காற்றாலை மின்சாரத் திட்டம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஒரு இந்தியன் குழுவொன்று மன்னார் மாவட்டத்தில் அதானி குழுமம் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து சென்றுள்ளது.
தற்போது இலங்கைக்கு இந்தியாவினால் எரிபொருள் வழங்கப்படுவதில்லை. ஆனால் வடபகுதியில் வளங்களை உபயோகப்படுத்துவதில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
தற்பொழுது இலங்கையில் உள்ள வளங்களை சரியாக பயன்படுத்த இலங்கை அரசுக்கு தெரியவில்லை. காலத்துக்கு ஏற்றவாறு எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்படாமையினால் நாடு வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டடிருக்கிறது.
இந்த அரசாங்கம் நாட்டினை கூறு போட்டு ஒவ்வொரு பகுதியாக விற்றுக் கொண்டிருக்கிறது. அதானி என்பவர் இந்தியாவில் முன்னணி பணக்காரர் என்பதுடன் புகழ்பெற்ற தொழிலதிபரும் ஆவார்.
இதனால் நாட்டின் வடபகுதியை அவருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.