ஒரு கிலோ அரிசியை இலாபத்துடன் சுமார் 190 ரூபாவுக்கு விற்க முடியும் என தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பந்துல குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட நடைமுறைச் சாத்தியமற்ற விலைச் சூத்திரம் காரணமாக நாட்டில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் பாரிய ஆலை உரிமையாளர்களின் தேவைகளுக்கு இணங்க செயற்படுவதனால் பெருமளவிலான சிறிய ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.