Wednesday, December 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் மருந்து தட்டுப்பாடு: கெஹெலியவிடம் அங்கஜன் MP விளக்கம்

யாழில் மருந்து தட்டுப்பாடு: கெஹெலியவிடம் அங்கஜன் MP விளக்கம்

யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடுகளை தீர்க்கும் பொறிமுறை தொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் யாழ் மாவட்ட எம்.பி அங்கஜன் இராமநாதன் கலந்துரையாடினார்.

கப்பல் மூலம் எடுத்துவரப்பட்ட இந்திய – தமிழக உதவிப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டபின்னர் அமைச்சருடன் இவ்விடயம் தொடர்பில் அவர் கலந்துரையாடியுள்ளார்.

வெளிநாடுகளினதும் புலம்பெயர் நன்கொடையாளர்களினதும் உதவியை நாடுவதனூடாக தேவையான மருந்துப்பொருட்களையும் இதர உதவிகளையும் விரைவாக நாட்டுக்கு பெற்றுக்கொள்வது தொடர்பாக இதன்போது சுகாதார அமைச்சருக்கு எடுத்துரைத்ததாக அங்கஜன் எம்.பி மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles