Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டில் சிகரெட் விற்பனை அதிகரிப்பு

நாட்டில் சிகரெட் விற்பனை அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சிகரெட்டின் விற்பனை அளவு 5% அதிகரித்துள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளை நிறுவனம் வெளியிட்டுள்ளது. காலாண்டில் அரசாங்க வரி வருமானம் (புகையிலை நிறுவனத்திடமிருந்து) 6% அதிகரித்துள்ளது.

இலங்கை புகையிலை நிறுவனத்தின் அண்மைய நிதி அறிக்கையின்படி மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் ரூ. 37 பில்லியன் விற்பனையில் அரசாங்க வரிகளாக 27.84 பில்லியன் மற்றும் ரூ. 2.58 பில்லியன் வருமான வரி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வருட காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 4.18 பில்லியன் ஆகும்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles