இன்று மாலைக்குள் முறையான அறிவிப்பு இல்லையென்றால் திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்ல மாட்டோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
ஆசிரியர்களின் போக்குவரத்திற்கு ஏதாவது பொறிமுறையை உருவாக்குமாறு பல தடவைகள் அரசிடம்இ அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்தோம்.
அதற்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. நாளுக்குநாள் நெருக்கடிகள் அதிகரித்தே செல்கின்றன.
பொதுமக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முரண்பாடுகள் உருவாக ஆரம்பித்துவிட்டன.இந்த நிலையில் இன்று மாலைக்குள் போக்குவரத்திற்கான பொறிமுறை உருவாக்கப்படாவிட்டால் திங்கள் முதல் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாது என்பதனை கல்வி அமைச்சிற்கும் பெற்றோருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்..
இது தொடர்பில் அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு