Wednesday, July 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 35 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 35 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 35 பேர் கொண்ட குழுவினர் பாணந்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கடற்படை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேலதிக நடவடிக்கைகளுக்காக குறித்த அனைவரையும் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதன்படி 25 ஆண்கள், பெண்கள் நால்வர் மற்றும் சிறுவர்கள் 6 பேர் குறித்த படகில் பயணித்துள்ளதுடன் ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் மேலும் ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கற்பிட்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 முதல் 56 வயதுக்கிடைப்பட்ட நபர்கள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles