Friday, July 25, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களே அதிகளவில் எரிபொருள் வரிசையில் காத்திருக்கின்றனர்

அரச ஊழியர்களே அதிகளவில் எரிபொருள் வரிசையில் காத்திருக்கின்றனர்

அரச ஊழியர்களே அதிகளவில் எரிபொருள் வரிசையில் காத்திருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அநேகமான அரசாங்க நிறுவனங்களில் வரவுப் பதிவிற்காக கைவிரல் அடையாளம் பயன்படுத்தாத காரணத்தினால் அவர்கள் இவ்வாறு பணி நேரத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சிலர் காலம் தாழ்த்தியே பணிக்கு சமூகமளிக்கின்றனர்.

அரச ஊழியர்கள் சம்பளத்துடன் விடுமுறை பெற்றுக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக காத்திருக்கும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளது.

இதனால் அநேகமான அரசாங்க நிறுவனங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.

பணிக்கு சமூகமளிக்காது சம்பளம் கிடைக்கப் பெறுவதனால் அரச ஊழியர்கள் முன்னரை விடவும் பணிகளை உதாசீனப்படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles