வைத்தியசாலைகளில் விசமுறிப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள்உண்மைக்கு புறம்பானவை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
4 மாத காலத்திற்கு தேவையான விசமுறிப்பு மருந்து மருத்துவ கட்டமைப்பில் உள்ளது.
திறைசேரி உரிய நேரத்தில் டொலரை வழங்காத காரணத்தினால் தற்போது ஒருசில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.