சைக்கிள் கொள்வனவுக்காக லீசிங் நிறுவனங்கள் கடனுதவி வழங்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் நெருக்கடி போன்ற காரணங்களால் தற்போது பலர் சைக்கிள்களை பயன்படுத்துகின்றனர்.
எவ்வாறாயினும் எதிர்பாராத வகையில் சைக்கிள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், புத்தளம் மற்றும் ஆனமடுவ பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு பல லீசிங் நிறுவனங்கள் கடன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.