கடும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாத நிலையில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க குடும்ப சுகாதாரப் பணியாளர்கள் தயாராக இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் பிரசவம் செய்வதற்கான அனுமதியும் அதிகாரமும் இலங்கை மருத்துவ சபையின் அனுமதி உள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குடும்ப சுகாதாரப் பணியாளர்கள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எந்நேரத்திலும், எவ்விடத்திலும் உதவி செய்வதற்கும் அவர்களைப் பராமரிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ஏற்கனவே கிராமப் புறங்களில் சில போக்குவரத்து பிரச்சினைகள் காணப்படுவதைக் கருத்தில் கொண்டு எந்த இடத்திலும் வசதிகளை அமைத்துக் கொடுக்க குடும்ப நலப் பணியாளர்கள் தயாராகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.