Friday, May 2, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2023 நடுப்பகுதி வரை மருந்து தட்டுப்பாடு ஏற்படாதாம்

2023 நடுப்பகுதி வரை மருந்து தட்டுப்பாடு ஏற்படாதாம்

அடுத்த வருடத்தின் நடுப்பகுதி வரை மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்படாது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர்,

மருந்து கொள்வனவுக்காக வருடாந்தம் 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரையில் 439 மில்லியன் அமெரிக்க டொலரை பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் மருந்து கொள்வனவுக்காக இலங்கைக்கு வழங்கியுள்ளன.

இதற்கு மேலதிகமாக சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக அவுஸ்திரேலியா, 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளது.

இதன்படி, மருந்து கொள்வனவுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

எனவே, அடுத்த வருடம் நடுப்பகுதி வரையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்படாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles