Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரெட்டா உட்பட 7 பேர் பொலிஸ் நிலையத்தில் சரண்

ரெட்டா உட்பட 7 பேர் பொலிஸ் நிலையத்தில் சரண்

கொழும்பு – கோட்டை மற்றும் தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (22) காலை தமது சட்டத்தரணிகள் ஊடாக மருதானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

கடந்த 6 மற்றும் 9ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் சமூக செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரனிந்து சேனாரத்ன, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சந்தேகநபர்கள் 9 பேரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

குறித்த சந்தேகநபர்களுள் லஹிரு வீரசேகர, ஜகத் மனுவர்ண, தம்மிக்க முனசிங்க, வண. ரத்கரவ்வே ஜினரதன தேரர், வண.கல்வெவ சிறிதம்ம தேரர், எரங்க குணசேகர, ஜெஹான் அப்புஹாமி ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles