நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எந்த திட்டமும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நந்தலால் வீரசிங்கவை இந்த மாத இறுதிக்குள் மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து நீக்கத் திட்டமுள்ளதாக வெளியாகும் தகவல்கள் வெளியாகின.
ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஆளும்தரப்பு நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில், வசந்த யாப்பா பண்டார எம்.பி கூறிய கருத்துக்கு பதிலளித்தபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் சேவைக் காலத்தை நீடிப்பதற்கு பிரதமரின் பரிந்துரை அவசியமாகும் என்று ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.