நாட்டின் முன்னணி அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன மற்றும் அரிசி உற்பத்தி ஆலைகளின் உரிமையாளர்கள் குழு இன்று கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியது.
தற்போது நாட்டு மக்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் அரிசியின் விலை எப்போதும் அதிகரிக்கப்பட மாட்டாது என குறித்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னர் டட்லி சிறிசேன தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது டட்லி சிறிசேனவுக்கும் நியூ ரத்ன அரிசி உரிமையாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தான் அரிசியின் விலையை அதிகரிக்க வேண்டும் என நியூ ரத்னா அரிசி உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட டட்லி சிறிசேன பொருத்தமானவர் என அவருக்கு நெருக்கமான வர்த்தகர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இதனால் தான் அவர் தேவையுடையோருக்கு உதவுவதாகவும், அவருக்கு தேவையான பணம் அவரிடம் இருப்பதாகவும், டட்லி சிறிசேன ஒருபோதும் திருட மாட்டார் எனவும் வர்த்தகர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், டட்லி சிரிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு எதையும் செய்ய தயார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.