நாட்டை நிலைநிறுத்துவதற்கு தேவையான எரிபொருள் வழங்கப்படும் எனவும் எரிபொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
ஐரோப்பாவுக்கான எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகத்தை இடைநிறுத்த ரஷ்யாவின் தீர்மானித்துள்ளமைக்கு அமைய, எதிர்காலத்தில் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.