Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் பணவீக்கம் இரண்டரை வருடங்களுக்கு தொடரும்

இலங்கையின் பணவீக்கம் இரண்டரை வருடங்களுக்கு தொடரும்

இலங்கையின் தற்போதைய உயர்மட்ட பணவீக்கம் இன்னும் இரண்டரை வருடங்களுக்கு தொடரும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகரித்துள்ள பணவீக்கம் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். விசேடமாக தொழில் இழப்பு, வருமானம் இழப்பு ஆகியவை ஏற்படும் சூழலில் வருமானம் குறைந்த கீழ் மட்ட மக்கள் கடுமையான நெருக்கடி நிலையை எதிர்கொள்வார்கள்.

சிறிய வர்த்தகர்கள், அன்றாடம் உழைக்கும் மக்கள் எதிர்பாராத நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால் பொருட்களின் தட்டுப்பாடும் ஏற்படும்.

இவ்வாறான சூழலில் வருமானம் குறைந்த மக்களுக்காக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாடுகளிடம் மனிதாபிமான உதவிகளை பெறுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய பணவீக்க வீதம் எதிர்காலத்தில் ஸ்திரமாக இருந்தாலும், அதிகரித்துள்ள பொருட்களின் விலைகள் அதே மட்டத்திலேயே இருக்கும் என கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்தார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles