Monday, May 26, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாடுகளுக்கு செல்லும் பணிப் பெண்களுக்கான வயதெல்லையில் மாற்றம்

வெளிநாடுகளுக்கு செல்லும் பணிப் பெண்களுக்கான வயதெல்லையில் மாற்றம்

பணிப் பெண் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்கான ஆகக்குறைந்த வயதெல்லை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, வெளிநாட்டிற்கு செல்லும் பணிப் பெண்களுக்கான வயதெல்லையை 21ஆக குறைக்கும் வகையில், சட்டம் திருத்தப்படவுள்ளது.

சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக செல்லும் ஆகக் குறைந்த தற்போது வயதெல்லை 25 ஆகும்.

அத்துடன், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்ணாக செல்லும் வயதெல்லை தற்போது 23 என்பதுடன், ஏனைய நாடுகளுக்கு பணிப் பெண்ணாக செல்வதற்கான வயதெல்லை 21 ஆகும்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நிய செலாவணியை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles