வெளிநாட்டு நாணயத்தில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் செய்வதன் மூலம் குறைந்தது 300 – 400 டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடு முழுவதும் பலரிடம் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு நாணயம் உள்ளது.
சுற்றுலாத் துறையில் ஒரு முன்னாள் வழிகாட்டியிடம் சிறிய அளவு வெளிநாட்டு நாணயம் இருக்க கூடும். இந்த மறைமுகமான வெளிநாட்டு நாணயத்தை வெளியே கொண்டு வரவே நான் இதனை முன்மொழிகிறேன்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெட்ரோல் நிலையம் ஒதுக்கப்பட்டு வெளிநாட்டு நாணயத்தில் மட்டுமே எரிபொருளை வழங்க வேண்டும்.
இலங்கையில் எண்ணிலடங்கா வெளிநாட்டு நாணயங்களை இழக்க முடியாது.
தான் கூறுவதை செயற்படுத்தினால் எரிபொருள் தேவையுடன் மறைந்திருக்கும் டொலர்களை வெளிக்கொணர முடியும். ஆகையினால் எனது பரிந்துரையைப் பற்றி சிந்தியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.