Friday, May 2, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ். ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)

யாழ். ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்னால் இன்று (20) ஒன்று திரண்ட ஆசிரியர்கள் தமக்கு எரிபொருளை பெற்றுத்தருமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

க.பொ.த சாதாரண தர விடைத்தாள் திருத்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம் .எரிபொருள் நெருக்கடியால் தூர பிரதேசங்களில் இருந்து வந்து இந்த பணியில் ஈடுபடுவது பிரச்சினையாக உள்ளது .வரிசையில் நின்று எரிபொருள் பெற்றுக் கொள்வதால் கடமைக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.

எரிபொருள் நிலையத்தில் ஆசியர்களை மிகவும் ஏளனமாக நடத்துகின்றனர்.மிகவும் மன உளைச்சலுடன் விடைத்தாள்களை திருத்த செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே மன அமைதியுடன் சென்று விடைத்தாள்களை திருத்துவதற்கு பொறுப்பான அதிகாரிகள் தமது போக்குவரத்திற்கு தேவையான எரிபொருளை தருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles