ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 73 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது தம்பியான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு தனது ட்விட்டர் கணக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
ஜனாதிபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அவர் தனது வாழ்க்கையின் மற்றொரு ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது அனைத்து நல்வாழ்த்துகளும் அவருக்கு உரித்தாகட்டும். அவருடைய பிரசன்னம் எப்போதுமே பலத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த நெருக்கடியிலிருந்து அவர் இந்த நாட்டை மீட்பார் என்ற உறுதி எனக்கு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
