Sunday, May 4, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார் துறை ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துமாறு கோரிக்கை

தனியார் துறை ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துமாறு கோரிக்கை

தனியார் துறை ஊழியர்களை கடமைகளுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி, முடிந்தவரை வீட்டிலிருந்தே கடமைகளை இணைவழியில் முன்னெடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நிறுவன தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்துவெளியிட்ட அவர், எதிர்வரும் 23ஆம் திகதி பெற்றோல் கப்பலொன்றையும் 24ஆம் திகதி டீசல் கப்பலொன்றையும் நாட்டுக்கு வரவழைப்பதற்கு நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அத்தியாவசிய சேவைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles