இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் மற்றும் 3 பேரினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சார்பாக சட்டமா அதிபர், மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால், எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 13 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
2019 இல் வழங்கப்பட்ட சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான வரிச்சலுகைகளால் அரசாங்க வருவாய் குறைப்பு, சட்டவிரோதமான வரிச் சலுகையைத் திரும்பப் பெறத் தவறியமை உள்ளிட்ட விடயங்கள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் fitch ரேட்டிங் குறைப்புகளுக்குப் பின்னர் அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கத் தவறியமை, ரூபாவின் மதிப்பை பேண தவறியமை உள்ளிட்ட விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்க, சட்டவிரோத, தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற செயல்களுக்கு அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.