எரிபொருள் வரிசையை குறைப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வலுசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி, வாகனங்களது இலக்கத் தகடுகளது இறுதி இலக்கத்தின் அடிப்படையில்இ எரிபொருள் வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த இலக்கத்தின் அடிப்படையில் வாராந்தம் 2 அல்லது 3 நாட்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும்.
எனினும் தொழில்சார்ந்த முச்சக்கர வண்டிகள் மற்றும் அத்தியாவசிய வாகனங்கள் இந்த திட்டத்துக்குள் உள்ளடக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டம் ஊடாக எரிபொருள் வரிசையை 3ல்2ஆக குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதும் இன்னும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவில்லை.