Sunday, May 25, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமிகவும் அமைதியான நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

மிகவும் அமைதியான நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

உலகில் மிகவும் அமைதியான நாடுகள் தொடர்பான குறியீட்டு தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதனடிப்படையில், 2022 ஆம் ஆண்டு தரப்படுத்தலின் படி இலங்கைக்கு 90வது இடம் கிடைத்துள்ளது.

குளோபல் பீஸ் இன்டெக்ஸ் (Global Peace Index) இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகள், அரசியல் ஸ்திரமின்மை, அரசியல் பயங்கரவாதம், அயல் நாடுகளுடனான உறவுகள், அகதிகள், இடம்பெயர்வுகள், உக்ரைன்-ரஷ்யா யுத்தம் ஆகிய பலவற்றை கவனத்தில் கொண்டு இம்முறை தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் உலகில் மிகவும் அமைதியான நாடுள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து, அயர்லாந்து, டென்மார்க் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகள் முறையே முதல் 5 இடங்களில் உள்ளன.

தரப்படுத்தலில் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ள 5 இடங்களில் ஆப்கானிஸ்தான், ஏமன், சிரியா,ரஷ்யா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகள் உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles