Friday, October 31, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொடி லெஸிக்கு பிணை

பொடி லெஸிக்கு பிணை

பூஸா சிறைச்சாலையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் உட்பட பல உயர் அதிகாரிகளுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் பொடி லெஸி என அழைக்கப்படும் அருமாஹந்தி ஜனித் மதுசங்கவுங்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று (17) காலி மேல் நீதிமன்ற நீதிபதி காவிந்தியா நாணயக்கார முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, இந்த குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.

பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணைக்கோரிக்கையை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு 50,000 ரூபா ரொக்க பிணையும், தலா 500,000 ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணையும் வழங்கினார்.

இதனையடுத்து, வழக்கு எதிர்வரும் 2023 ஜனவரி 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles