சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளின்போது, சீனாவிடம் இருந்து இலங்கை பெற்றுள்ள கடன், சிக்கலாகியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 15% சீனாவிடம் இருந்தே பெறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, சீனா, இலங்கைக்கான கடனில் மீளமைப்பை மேற்கொள்வதற்கு இன்னும் இணங்கவில்லை.
எனவே சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு நிதியுதவியை வழங்குமானால், அதனைக் கொண்டு இலங்கை, சீனாவின் கடனை திருப்பிச் செலுத்தும் செயற்பாடே இடம்பெறும்.
மாறாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிதியைக்கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளவும், அதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை திருப்பிச்செலுத்துவதற்கும் இலங்கைக்கு இயலாத நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.