எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திறந்த பல்கலைக்கழகத்தில் எழுதிய சுற்றாடல் விஞ்ஞானம் தொடர்பான முதுமாணி பட்டப்படிப்புக்கான பரீட்சையில் இரண்டு பாடங்களில் சிறப்பு பெறுபேறுகளை பெற்றுள்ளார்.
அதற்கமைய Environmental Policy Planning And Assessment பரீட்சையில் A+ பெறுபேறும், Environmental Economics And Management பரீட்சையில் A- பெறுபேறும் பெற்றுள்ளார்.
அரசியல்வாதியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் போது சுற்றாடல் விஞ்ஞானத்தில் முதுமானி பட்டம் பெற்ற முதல் அரசியல் தலைவர் சஜித் பிரேமதாச என கருதப்படுகிறது.

