ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமித்தமை அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் வெற்றிடமாகும்போது, பொதுத் தேர்தலில் மாவட்டங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவில் பெயர் உள்ளடங்கிய அல்லது தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவரை மாத்திரமே நியமிக்க முடியும் என மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.
எவ்வாறாயினும், கடந்த பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களிலோ அல்லது தேசியப் பட்டியலிலோ தம்மிக்க பெரேராவின் பெயர் உள்ளடக்கப்படாததால், நாடாளுமன்றத்தின் வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேராவை நியமித்தமை அரசியலமைப்பிற்கு முரணானது என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.