நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கட்டுலந்தவத்த – எல்லக்கந்தவில் வசிக்கும் 26 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தியின் படுகொலை தொடர்பில் இதுவரை 31 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.