இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன இணையத்தளம் மற்றும் செயலி என்பனவற்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் இன்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரப்படுகிறது.