இலங்கையின் பிரபல ஆடை நிறுவனங்கள் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதற்கமைய, பத்தாயிரம் ரூபா அல்லது அதற்கு மேல் ஆடை அல்லது பொருட்களை வாங்கினால் ஐந்து கிலோ அரிசியை வழங்குவதற்கு நாட்டின் பிரபல ஆடை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், 5000 ரூபா அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள ஆடை அல்லது பொருட்களை வாங்கினால், பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில் வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.