இலங்கை மின்சார சபையினால் 3100 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 50 ஜெனரேட்டர்கள் இயங்கும் நிலையில் இல்லை என கோப் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜூன் 10 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கோப் குழுவினால் இந்த விடயடம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கொள்வனவு செய்யப்பட்ட ஜெனரேட்டர்கள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.
குறித்த ஜெனரேட்டர்கள் வாங்கும் போது தரம் தொடர்பில் சோதிக்கப்பட்டதா என்றும், அதற்கான செலவுப் குறித்தும் இலங்கை மின்சார சபை உறுப்பினர்களிடம் வினவப்பட்டது.
குறித்த கொள்வனவுகள் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டதாகவும், கொள்வனவுகளுக்காக 3100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்தக் காலப்பகுதியில் வாங்கப்பட்டிருந்தாலும், இயங்காத நிலையில் உள்ள ஜெனரேட்டர்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோப் குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.