நாட்டில் தற்போது 3 மணித்தியாலத்துக்கும் குறைவான மின்சார துண்டிப்பு நாளாந்தம் அமுலாக்கப்பட்டு வருகிறது.
டிசம்பர் மாதம் வரையில் 3 மணித்தியாலத்துக்கு குறைவான மின்வெட்டுடன் நாட்டை கொண்டு செல்ல முடியும் என்று பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
ஆனால் விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால், அடுத்த 4 ஆண்டுகளுக்கு மேல் மின்சார தடையை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே குறுகிய காலத்துக்குள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களைக் கொண்ட மின்னுற்பத்தி முறைமைக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.