குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு வழங்கப்பட வேண்டியிருந்த சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் சுகாதார அமைச்சிற்கு மீள வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கான சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளை ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மீள செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
அவருக்கு 2 மில்லியன் ரூபாவுக்கும் அதிக கொடுப்பனவு வழங்கப்பட்டது.
நாட்டில் தட்டுப்பாடாகியுள்ள மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக குறித்த தொகையை அவர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் குறித்த கொடுப்பனவுக்கான காசோலையைப் பெற்றுக்கொண்டதுடன், அதனை சுகாதார அமைச்சிற்கு மீள வழங்குவதற்கு அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
