நாட்டில் எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.
இதன் காரணமாக மக்கள் நேரடியாக நெல்லை கொள்வனவு செய்து சேமிக்க ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் நெல் உற்பத்தி செய்கின்ற விவசாயிகள் தங்களது நெல்லை சந்தைப்படுத்தாமல் சேமித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நெல்லின் விலை 300 ரூபா வரையில் உயர்வடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.