அரச உத்தியோகத்தர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
‘எரிபொருள் விலை உயர்வு காரணமாக, போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால் அரச ஊழியர்கள் தமது கடமைகளுக்காக செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அத்துடன், அரச உத்தியோகத்தர்கள் தாம் வாழும் பிரதேசத்தில் விவசாயத்தில் ஈடுபட விரும்பினால் அவர்களுக்கு அரச நிர்வாக அமைச்சின் உதவிகள் மற்றும் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படும். என அவர் மேலும் தெரிவித்தார்.