Wednesday, March 19, 2025
27 C
Colombo
செய்திகள்உலகம்மோசமான விளைவுகளை எதிர்நோக்குவதை தடுக்க முடியாது - உலக வங்கி

மோசமான விளைவுகளை எதிர்நோக்குவதை தடுக்க முடியாது – உலக வங்கி

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகரித்து வரும் பொருட்களின் விலைகள் மற்றும் குறைவடைந்து வரும் வளர்ச்சி என்பனவற்றால், குறித்த நாடுகள் எதிர்வரும் ஆண்டுகளில் மிக மேசமான சவாலை எதிர்கொள்ள நேரிடும்.

1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட நிலைமையை போன்று, எதிர்வரும் வருடங்களிலும் ஏற்படலாமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி வீதம், உலக வங்கியினால் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரித்த பணவீக்கம் மற்றும் துறைசார் வளர்ச்சியின் மந்தநிலை என்பனவற்றால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை பல நாடுகள் எதிர்நோக்குவதை தடுக்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் எண்ணெய் விலை 42 வீதத்தாலும் எரிசக்தி அல்லாத பொருட்களின் விலை 18 வீதத்தாலும் அதிகரிக்கப்படலாமென உலக வங்கியினால் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles