குருநாகல் மாவட்டத்தில் செல்வந்தர்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே எரிபொருள் கிடைப்பதாக தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (09) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுறவு எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காது எனவும் உடுபத்தாவை பகுதிக்கு கடந்த 14 நாட்களாக எரிபொருள் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.