Friday, October 31, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயூரியா உர கொள்வனவுக்கு இந்தியாவிடமிருந்து கடன்

யூரியா உர கொள்வனவுக்கு இந்தியாவிடமிருந்து கடன்

யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்கு இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியில் (Exim Bank) இருந்து கடன் பெறும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2022/23 பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிடம் இருந்து பெற்றுத்தருவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்திருந்தது.

குறித்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles