மின் கட்டணம் 250 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை காணப்பட்டாலும், சாதாரண அளவில் தற்போது கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினென்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான யோசனைகள் மின்சக்தி அமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான இறுதி தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.