அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (07) ஆரம்பமானது.
நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை.
எவ்வாறாயினும், விசேட அழைப்பு விடுக்கப்பட்டால் மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும்.