Friday, March 27, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசியல்வாதிகளிடமிருந்து மின் கட்டணங்களை வசூலிக்க நடவடிக்கை

அரசியல்வாதிகளிடமிருந்து மின் கட்டணங்களை வசூலிக்க நடவடிக்கை

அரசியல்வாதிகளிடம் இருந்து காலதாமதமான மின்சார கட்டணத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் தலைவரான எம்.எம்.சி பெர்டினாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் மின்சார கட்டணங்கள் தொடர்பில் அவ்வப்போது பிரச்சினைகள் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ இல்லங்களில் அரசியல்வாதிகளின் மின்சாரக் கட்டணங்கள் அரசாங்கத்தினாலோ, சம்பந்தப்பட்ட அமைச்சராலோ அல்லது அமைச்சினாலோ செலுத்தப்படுகின்றன, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அமைச்சு நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிவிடுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறும்போதும், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசிப்பிடங்களை ஏற்கும்போதும், அவர்கள் தங்கள் விவரங்களை மாற்ற தவறிவிடுகிறார்கள்.

இதனால் மின் கட்டணங்களில் பாரிய தொகை நிலுவையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles