தங்காலை – மொரகெடியர பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று நேற்று (05) இடம்பெற்றது.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் இலங்கையில்4 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி இருப்பதுடன், அவற்றில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
போதைப்பொருள் விவகாரத்தினால் தங்காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவோ கைதுசெய்யப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
