Saturday, December 20, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு450 போதை மாத்திரைகளுடன் பொலிஸ் அதிகாரி கைது

450 போதை மாத்திரைகளுடன் பொலிஸ் அதிகாரி கைது

திருகோணமலை – தானியகம பிரதேசத்தில் நேற்றிரவு 450 போதை மாத்திரைகளுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் அதிரடி பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர், திருகோணமலை நகரில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகத்தில் பணியாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொமுனுபுர, 5ம்கட்டை பிரதேசத்தை சேர்ந்த 46 வயதானவரே இவ்வாறு கைதானார்.

வீட்டில் இருந்து தானியகம பிரதேசத்திற்கு போதை மாத்திரைகளை கொண்டுசெல்லும் போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சீனன்குடா பொலிஸார் தெரிவித்தனர் 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles