Monday, May 26, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுவர் மருத்துவமனையில் கடும் உணவு தட்டுப்பாடு?

சிறுவர் மருத்துவமனையில் கடும் உணவு தட்டுப்பாடு?

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தற்போது மருந்து தட்டுப்பாடுக்கு மேலதிகமாக கடுமையான உணவு நெருக்கடியை அனுபவித்து வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுவர்களின் வளர்ச்சிக்கு உணவில் புரதம் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்றாலும், உள்நோயாளிகளாக இருக்கும் சிறுவர்களின் தினசரி உணவில் இறைச்சி, மீன், முட்டை அல்லது பருப்பு போன்றவை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சில சிறுவர்களுக்கு நாளாந்தம் 10 முட்டைகள் வழங்கப்பட வேண்டும்.

எனினும் அதனை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிந்த சருமத்தை மீட்க புரோட்டீன் அடங்கிய உணவுகளை உட்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், தற்போது தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுக்கு ஒரு கொடையாளரிடமிருந்து குறைந்த அளவிலான முட்டைகளை பெற்றுக் கொள்வதாகவும், கையிருப்பு நிறைவடைந்த பிப்னர் முட்டைகளை வழங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles