ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக கேகாலை முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன மற்றும் ஏனைய அதிகாரிகளை கைது செய்யுமாறு கேகாலை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் ஜூன் 27ஆம் திகதி சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.