SJB MP திலிப் வெதஆரச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் குழுவொன்று அவர்களின் வீட்டிற்கு சென்ற போது, அங்கு எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சம்பவத்தின்போது அவர்களை கைது செய்யாத பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது எடுக்கப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.